அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் முகநூல் பார்க்க தடை! விரைவில் சுற்றுநிருபம்!

” அரச ஊழியர்கள், கடமை நேரத்தின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” காலையில் கடமைக்கு வந்து கையொப்பம் இடுவதும், மாலை கையொப்பம் இட்ட பின்னர் வீடு செல்வதும்தான் சேவையென சில அரச ஊழியர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். அதேபோல சிலர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தாங்கள்தான் அரச நிர்வாகக் கட்டமைப்பை செயற்படுத்துவதாக தொழிற்சங்க தலைவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, அலுவலக நேரத்தில் அரச ஊழியர்கள் தொலைபேசியை அதிகம் பயன்படுத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார கூறினார்.

Related Articles

Latest Articles