அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

 

பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்றைய தினம் (29.09.2026) நேரில் சென்று சந்தித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Latest Articles