தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரும், ரிஷாட் அணி உறுப்பினர்கள் இருவரும் ’20’ ஐ ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
’20’ ஐ ஆதரித்து வாக்களித்த எதிரணி எம்.பிக்கள் விபரம்
1. டயானா கமகே – ஐக்கிய மக்கள் சக்தி
2. நஸீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ்
3. ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் – முஸ்லிம் தேசிய கூட்டணி
4. பைசல் காசீம் – முஸ்லிம் காங்கிரஸ்
5. ஹாரீஸ் – முஸ்லிம் காங்கிரஸ்
6. தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸ்
7. அரவிந்தகுமார் – தமிழ் முற்போக்கு கூட்டணி
8. இஷாக் ரஹ்மான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்










