மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் நேற்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர்.
இந்த அரிய வகை ஆமை கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு, இறைச்சிக்காகக் கரையை நோக்கிக் கொண்டு வரப்பட்ட நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற் படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை கடற்படையி னர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின் னர் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். மேலும் அந்த் ஆமையைத் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட வலைகள்,வெளி இணைப்பு இயந்திரம், படகு போன்றவற் றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பி டத்தக்கது.