நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.
உறுதியான திட்டங்கள் அற்ற, வெற்று ஆவணமே இந்த பட்ஜட் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான திட்டங்களும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்ஜட் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,
” பஸிலுக்கு ஏழு மூளைகள், அலாவுதீனின் அற்புத விளக்கு போல் பட்ஜட் அமையும் என ஆளுங்கட்சியினர் சூளுரைத்தனர். ஆனால் இன்று மக்கள் நல திட்டங்களை புறக்கணித்தும், வரி சுமையை அதிகரிக்கும் விதத்திலும் பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பயனற்ற பாதீடாகும்.” – என்றனர்.