அவிசாவளை வெடி விபத்தில் மஸ்கெலியாவை சேர்ந்த குடும்பஸ்தரே பலி!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா, கிலென்டில்ட் தோட்டத்தை சேர்ந்த 49 வயதான கந்தசாமி ஜெகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 7 வயதில் பிள்ளையொன்று இருக்கின்றார். அவர் தரம் 2 இல் கல்வி பயில்கின்றார்.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு நபருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸார், மரணமடைந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles