சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சைட்னயா நிலவறையில், சிறைவைக்கப்பட்டவர்களைத் தேடி உறவினர்கள் படையெடுத்துள்ளனர். இங்கு நடந்திருப்பவை பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் அஷாத்தின் கொடுமைகளை வெளிக்கொணவர்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் வகையில் உள்ள இந்த நிலவறைச் சிறைச்சாலை ஜனநாயகத்தின் பாதாளக்குழி எனவும் விமர்சிக்கப்படுகிறது.
அஷாதின் ஆட்சிக் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக சிறை வைக்கப்பட்ட தங்களது அன்புக்குரியவர்களைத் தேடி உறவினர் படையெடுத்து வருகின்றனர்.
இதனால், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான வாசல்களைத் திறந்துள்ளதா கவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை மீறல்களுக்கு பெயர்போன இந்த சிறைச்சாலை தரிசு பாலை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் கைதானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அமைந்துள்ளன.பொதுமக்களை தடுத்துவைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்கும் மக்களை கொலை செய்வதற்கும் இந்த சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது பசார் அல் அஷாத் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் சைட்னயா சிறையின் வாயில், நூற்றுக்கணக்கானவர்களால் நிரம்பி
வழிகின்றது.ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சிக்காரர்கள் சிரிய தலைநகரை கைப்பற்றிய வேளை சைட்னயா சிறைச்சாலையிலிருந்து பலரை விடுவித்ததாக தெரிவித்தனர்.பெண்கள் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறுவதற்கு தயங்குவதை வீடியோக்கள் காண்பித்தன.