ஆசிரியர் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள சௌமிய பவனில் நடைபெற்றது.
அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆதரவு வழங்குமாறு தொழிற்சங்க பிரமுகர்கள் இ.தொ.காவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய ஆசிரியர் சங்கமும் தொழிற்சங்கம் நடத்துகின்றது. எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களை சார்ந்தே செயற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இ.தொகா. பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் ஆகியோர் இ.தொ.கா. சார்பில் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.










