கூடிய விரைவில் நாட்டின் ஆட்சி ஒழுங்கைச் சீர்செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியானதும் அமைதியானதுமான ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு சகல தரப்புகளையும் அது கேட்டிருக்கிறது.
நாட்டில் அடுத்த சில நாட்கள் நீடிக்க இருக்கும் அதிகார வெற்றிடநிலைமை குறித்து இந்தியாவும் மேற்கு நாடுகளும் தீவிர கவனம் செலுத்திவருவது தெரிகிறது.
அதேவேளை, கொழும்பில் பெரும் மக்கள் கிளர்ச் சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலகுவதாகக்கூறி ஒதுங்கியிருக்கின்றனர். இதனால் அங்கு நிலவும் அதிகார வெற்றிடம் குறித்து இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.










