‘ஆதரவை விலக்கிக்கொண்டாலும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும்’

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து  நஸீர் அஹமட்  நீக்கப்பட்டுள்ளார் – என்று அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்தார்.  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் இன்று கூடியது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

” கட்சியின் நாக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.  இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது.

மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும். அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர்.

நஸீர் அஹமட் வழங்கியிருந்த விளக்கம் திருப்திகரமாக அமையவில்லை. உண்மைக்கு புறம்பான விடயங்களை அதில் குறிப்பிட்டுள்ளர். உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம்.” – என்றார்.

Related Articles

Latest Articles