‘ஆபத்தான வைரஸ்’ – 6 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை!

அதிவீரியம் கொண்ட புதிய வகையான வைரஸ் பரவலையடுத்து, 6 நாடுகளுக்கு இலங்கை தற்காலிக பயணத்தடையை விதித்துள்ளது.

தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகளில் இருந்தே இலங்கை வர இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை  இத்தடை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்படி நாடுகளிலிருந்து இன்று எவரேனும் வருகைத் தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் பரவும் அதிவுயர் ஆபத்தான கொவிட் − ஒமிக்ரோன் வைரஸ் பரவலிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் நோக்கிலேயே, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles