பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நாளை (07) நடைபெறவுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு ஒப்பந்த பேச்சில், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
தமக்கான அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனினும், இந்த கோரிக்கையை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துவருகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அடிப்படை நாட் சம்பளமாக 700 ரூபாவை பெறும் நிலையில் அதனை 750 ரூபாவரை அதிகரிப்பதே கம்பனிகளின் எதிர்ப்பார்ப்பு. தொழிற்சங்கங்களும் இழுத்தடிப்பு செய்துவருகின்றன.
இந்நிலையிலேயே நாளை தீர்க்கமான சந்திப்பு நடைபெறவுள்ளது.