ஆரம்ப நிகழ்வுக்கு 7 கோடி ரூபா! மறுநாளே விமான சேவை நிறுத்தம்!!

ஏழு கோடி ரூபாவுக்கு  மேல் செலவிட்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட  இரத்மலானை, மாலைத்தீவுக்கிடையிலான விமான சேவை ஆரம்பித்த மறுநாளே நிறுத்தப்பட்டது.

நாட்டில் தற்போதுள்ள நிலையின் படி இதுபோன்ற விமான சேவைகளை நடத்திச் செல்வது அநாவசியமானதென்று மாலைதீவு அறிவித்துள்ளதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தால் இந்த ஆரம்ப உற்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அதிபதிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விமான சேவையை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles