விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்ந்து ஒப்புதல் பெறுவதற்காகவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழு கூட்டம் அங்கு நடைபெறவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
