ஆளுநர் நியமனத்தில் ஐ.தே.க. – மொட்டு கட்சிகளிடையே மோதல்!

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே உள்ளிட்டவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

எனினும், ஆளுநர்களாக எவரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையொன்றை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் தற்போது குழப்ப நிலை உருவாகியுள்ளது.

அத்துடன், தற்போது ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் தமது பதவியை நீடிப்பதற்கான நகர்வுகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles