‘ஆளுநர் பதவியை ஏற்கமாட்டேன்’

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றார் என்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ‘மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கில்லை. என்னைப் பொறுத்தமட்டில் பாரிய நெருக்கடிக்கு மத்தியிலும் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார் என்றே கருதுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன.

Related Articles

Latest Articles