ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவரான அந்தோனி அல்பானீஸி பிரதம அமைச்சராக இன்று பதவியேற்றார்.
அத்துடன், புதிய அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் தலைமையில் கன்பராவிலுள்ள அரச மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.
பதவியேற்பு விழாவில் பிரதமர் அல்பானீஸி, கரம் பிடிக்கவுள்ள காதலி மற்றும் மகன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
ரிச்சர்ட் மார்லஸ் பாதுகாப்பு அமைச்சராகவும், பென்னி வோங் வெளிவிவகார அமைச்சராகவும், ஜிம் சால்மர்ஸ் ஆகிய பொருளாளராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். இதற்கு முன்னரும் மேற்படி பதவிகளையே அவர்கள் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.