பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் ஸ்ரீவர்தனவுடன் , கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய நலன்புரி நலன்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்வரை, இடைக்கால கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை செந்தில் தொண்டமான் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
