“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஜனாதிபதி பதவி விலகவேண்டும்.”
என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர தெரிவித்துள்ளார்.
விகாரமகா தேவி பூங்காவில் 7 ஆவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை , பௌத்த கலாசாரத்தை அழிக்கும் கள்ளத் தோணி அரசாங்கம் எனவும் விமர்சித்துள்ளார்.










