இந்தியாமீது 50 சதவீத வரி: ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

‘ அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles