இந்தியாவிலிருந்து எதனோலை இறக்குமதி செய்வதில் இலங்கை நாட்டம் – நிதின் கட்காரி

ந்தியாவிலிருந்து எதனோலை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பெரிதும் நாட்டம் காண்பித்திருப்பதாக இந்தியாவின் வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

எதனோல் இறக்குமதி தொடர்பில் தாம் இரு நாட்டு அரசாங்கங்களுடனும் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

நான் இவ்விடயம் குறித்து பங்களாதேஷ் பிரதமருடனும் இலங்கை அமைச்சருடனும் கலந்துரையாடி இருக்கிறேன்.

அவ்விருவரும் பெற்றோலுடன் கலப்பதற்கு அவசியமான எதனோலை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தமது நாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.

புது டில்லியில் நடைபெற்ற உயிரியல் சக்திவலு தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.

மேலும், அடுத்த 15 நாட்களில் பெற்றோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இவ்விடயம் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles