இந்தியாவில் இருந்து 6 லட்சம் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகமாக இந்தியாவிடம் இருந்து குறித்த 6 இலட்சம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










