இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா – தடுப்பூசி ஏற்றுமதியிலும் தாக்கம்!

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தற்போதுள்ள வயது வரம்பை தளர்த்தி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘காவி’ எனப்படும், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான, சர்வதேச கூட்டமைப்பின் தலைவர் சேத் பெர்க்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

எனவே, உலக நாடுகளுக்கு இந்தியாவின் தடுப்பூசி குறைவாகவே கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles