இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கேரளாவில் 2 பேர், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளா தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது, கேரளாவில் நேற்று ஒரே நாளில் 192 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.