இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் திகதி எண்ணப்படும்.
தலைநகர் டில்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்குகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் திகதி நடைபெறுகிறது.
94 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் திகதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் திகதி நடைபெறுகிறது.
49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் திகதி p நடைபெறுகிறது.
57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் திகதி நடைபெறுகிறது.
57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7 ஆம் கட்டம் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் திகதி நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு- ஏப்ரல் 19