கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 918 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 24 மணிநேரத்தில் 74 ஆயிரத்து 383 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் 70 லட்சத்து 53 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 60 லட்சத்து 77 ஆயிரத்து 976 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 371 பேர் பலியாகியுள்ளனர். 8 லட்சத்து 67 ஆயிரத்து 459 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.