இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை நிறுத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு உ ள்ளார். ஆனால், ரஷ்யா பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால் இந்தியா மீது, 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுஉள்ளார்.

இதற்கிடையே, ரஷ்யா வுடன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.

இந்த பதற்றத்திற்கு இடையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலர் செர்ஜி ஷோய்குவை நேற்று சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் அஜித் தோவல், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறப்பான நீண்டகால உறவு இருக்கிறது. இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக புடின் இந்தியாவுக்கு வர உள்ளார். திகதிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன என அறிகிறேன்.” என தெரிவித்தார்.

உக்ரைன் உடனான போருக்குப் பின் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும், புடினும் இரண்டு முறை சந்தித்துக் கொண்டனர்.

மாஸ்கோவில் நடந் த உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, புடினை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, நட்புறவு குறித்து பேச்சு நடத்தப்பட்டது.

Related Articles

Latest Articles