இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்தினார்.
டில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
