இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஏற்படாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தணிக்கப்பட வேண்டும். இதுவிடயத்தில் ரஷ்யா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது நிலவும் சூழ்நிலை அவ்வளவு நல்லது அல்ல. இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு ரஷ்யாவால் மத்தியஸ்தம் வகிக்க முடியும்.
போர் ஏற்படாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும். போர் ஏற்படுவதற்குரிய சூழ்நிலை தற்போது இல்லை என்றபோதிலும் பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது.
காஷ்மீரில் அல்ல உலகில் எந்தமூலையில் பயங்கரவாதம் இருந்தாலும் நாம் அதனை எதிர்க்க வேண்டும்.” – என்றார்.