இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த்தால் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்படனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்னர்.

இதன் போது போராட்டகார்ர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்த மீனவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்கட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles