இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக 27 ஆம் திகதி யாழில் போராட்டம்!

இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத இழுவைப்படகு தொழில் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவகக் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்திய மீனவரின் சட்டவிரோத இழுவைமடித் தொழில் நடவடிக்கையானது வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேசத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்றது. இதை நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள், கோரிக்கை களை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில்,எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதியில் இறங்கி போராடத் தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் தீவகக் கடற்றொழில் அமைப்புக்க ளான மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு,வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்
ளோம்.” எனவும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக் கிழமை நடைபெறும் இந்தப் போரட்டம் யாழ். பண்ணையில் உள்ள கடல்வள நீரியல் திணைக்களம் முன்பாக ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் செல்லவுள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles