இந்தோனேசியாவில் இரு வாரங்களில் 114 வைத்தியர்கள் பலி

இந்தோனேசியாவில் இதுவரை 545 வைத்தியர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அது பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது.

இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா மாறி இருக்கிறது. இந்தோனேசியாவில் கிராமப்பகுதிகளே அதிகமாக உள்ளது. அங்கு போதுமான ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை.

இதனால் நோயில் சிக்கியவர்கள் சிகிச்சை கிடைக்காமலேயே செத்து மடியும் அவலம் ஏற்பட்டுள்ளது.  நேற்று மட்டும் 44 ஆயிரத்து 721 பேரை கொரோனா தாக்கி உள்ளது. 1,093 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

வைத்தியசாலைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வைத்தியர்கள், தாதியர்கள் இல்லை. அதே நேரத்தில் அவர்களும் கொரோனாவில் சிக்கி பலியாகிறார்கள். கடந்த 2 வாரத்தில் மட்டுமே 114 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இதுவரை 545 டாக்டர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles