” கிழக்கில் வாழும் சிங்கள மக்களை தூண்டும் வகையிலும், இனவாதத்தை பரப்பும் விதத்திலுமே சாணக்கியன் எம்.பி. நாடாளுமன்றத்தில் உரையாற்றிவருகின்றார்.” – என்று அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கதைக்கின்றாரா? இல்லை. மாறாக சிங்கள மக்கள் வாழும் பகுதியை தமது நிலப்பகுதியாக மாற்றிக்கொள்வது பற்றியே கதைத்துவருகின்றார்.
அப்பாவி தமிழ் மக்கள் வாழும் கிராமங்கள், அவர்களுக்குரிய வீதிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் பற்றி அவர் கதைப்பதை நாம் எப்போதும் கண்டதில்லை. மயிலத்துமடு, திவுலபதான உட்பட சிங்கள குடும்பங்கள் வாழும் பகுதியை பற்றியே பேசுகின்றார். வாழ்வாதாரம் பற்றி பேசவில்லை. மாறாக சிங்கள் மக்கள் வாழ்வது தமது தாயகத்துக்கு பொருத்தமற்ற செயல் என்பதையே காட்டுவதற்கு விளைகின்றார்.
சிங்கள மக்களை தூண்டும் வகையிலும், விரட்டுவதை இலக்காகக்கொண்டே கதைக்கின்றார். இனவாதத்தை பரப்புகின்றார். நாட்டை முன்னேற்றுவது பற்றி கதைப்பதில்லை.” – என்றார்.