இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் உட்பட முக்கியமான சேவைகள் சுகாதார நெறிமுறைகளின் பிரகாரம் வழமைபோல் முன்னெடுக்கப்படும்.