நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 28 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 26 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மண்சரிவால் ஒருவர் பலியாகியுள்ளார்.
அதேவேளை, மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










