ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக ‘ஒன்லைன்’ ஊடாகவே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இம்முறை நேரடியாக நடைபெறவுள்ளது.
எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் ‘என்டிஜன்ட் பரிசோதனை’ மேற்கண்டபின்னரே கூட்டத்துக்கு வரவேண்டும் என ஜனாதிபதி செயலகத்தால் பணிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் சில அமைச்சர்கள் நேற்றைய தினமே பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிலர் இன்று காலை மேற்கொள்ளவுள்ளனர்.
