இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 430 ரூபாவுக்கு தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 420 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles