நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அதற்கான அமைச்சரவை பத்திரம் இறுதிப்படுத்தப்படவுள்ளது.
அதன்பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. அமைச்சரவையில் இறுதிபடுத்தப்பட்ட பிரேரணை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.