இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி?

திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.

தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நேற்று (14) வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபத்தில், மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து திருமணங்களும் பதிவு திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.

ஒரேநேரத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின் படி, பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்களில், இருக்கை திறனுக்கமைய, 30 சதவீதம் வரை, மக்களை உணவருந்த இடமளிக்கலாம். ஆனால், மதுபானம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை, அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles