இன்று முதல் புதிய விசா நடைமுறை அமுல்

புதிய விசா நடைமுறை மற்றும் புதிய Online நடைமுறை ஆகியன இன்று(17) முதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளாது.

புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணம், பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் நாட்டில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதி ஆகிய விடயங்கள் தொடர்பில் அண்மையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டது.

புதிய நடைமுறையினூடாக பல்வேறு நாடுகளில் இருந்து Online ஊடாக விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சுற்றுலா விசாவை 6 மாத காலப்பகுதிக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles