இபோச பஸ்ஸில் டீசல் திருடிய சாரதியும், நடத்துனரும் கைது!

இபோச பஸ்ஸொன்றில் டீசலை திருடியதாக கூறப்படும் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை டிபோவில் பணிபுரியும் 58 வயதான சாரதியும் , 24 வயதுடைய நடத்துனருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மஹியங்கனை தொடக்கம் திஸ்ஸபுர வரை பயணிக்கும் இலக்கம் என்.ஏ. 1296 பேருந்தில் இருந்து 10 லீற்றர் டீஷல் திருடியதாக டிப்போ அதிகாரியினால் மஹியங்கனை பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேருந்தின் டீஷல் தாங்கியில் இருந்து 10 லீற்றர் டீஷல் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles