‘இரட்டை குடியுரிமை’ தடை உறுதியானது! கடுப்பில் பஸிலின் சகாக்கள்!!

இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் சரத்து அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இரட்டைக் குடியுரிமை உடையோர் எம்.பி. பதவி வகிப்பதற்கு 19 இல் தடை விதிக்கப்பட்டது. அந்த ஏற்பாடு ’20’ ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டது. எனினும், மக்களின் கோரிக்கையை ஏற்று 19 இல் இருந்த ஏற்பாடு 22 ஊடாக மீண்டும் வந்துள்ளது.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles