இரத்தினபுரி, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறைக்குள் வீற்றிருக்கும் அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுனுக்கு மேற்பட்ட பிரமாணத்தை உடைய தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன், இ.தொ.காவின் உப செயலாளர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் கவனத்துக்கும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்