இரத்தினபுரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் விபசார கலாசாரம் குறித்து பொதுமக்கள் தரப்பில் பெரும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையால் இளம் தலை முறையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் விடுதிகளில் இடம்பெற்று வந்த விபசாரத் தொழில் பொலிஸாரால் தேடப்பட்டு சுற்றிவளைக்கப்படுவதனால் நடமாடும் விபசார விடுதிகள் சூட்சுமமான முறையில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக முச்சக்கரவண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றுக்கு அடிமையானோர் பாதுகாப்பான இடங்களுக்கு முச்சக்கர வண்டிகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு விபசாரத்துக்கு அடிமையானோரிடம் அதிகமான தொகை அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.










