இரத்தினபுரியில் 6 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 140 வேட்பு மனுக்களில் 134 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்பட்டு 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் தெரிவித்தாட்சி அலுவலர் முன்னிலையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூராட்சி தேர்தலுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் இருந்து 148 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 140 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன.

Related Articles

Latest Articles