இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை!

“நான் சர்வாதிகாரியெனில் இறுதிபோரின்போது ஆட்சியை பிடித்திருப்பேன். ஜனநாயகத்தின் பிரகாரம் செயற்படுவதால் அவ்வாறான தேர்வுகளை நாடவில்லை.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.

“ பொன்சேகா தலைவரானால் சர்வாதிகார ஆட்சியே நடக்குமென விமர்சிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். நான் இராணுவத்தில் இருந்தபோது கூட சர்வாதிகாரிபோல செயற்பட்டது கிடையாது.

அவ்வாறான மனோநிலை இருந்திருக்குமானால், இறுதிப்போரின்போது இராணுவ தலைமையகத்தின் நுழைவாயில்களை இரு பக்கமும் மூடி இருந்தால் எனக்கு ஆட்சியை பிடித்திருக்க முடியும். நாம் அவ்வாறு செய்பவர்கள் அல்லர். ஏனெனில் ஜனநாயகத்தை மதிப்பவர்கள்.

போரை முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் என்னை சர்வாதிகாரியென விமர்சிக்கின்றனர். நாடு முன்னேற வேண்டுமெனில் நாட்டை நேசிக்கக்கூடிய சர்வாதிகாரியொருவர் அவசியம்தான்.@ எனவும் பொன்சேகா கூறினார்.

Related Articles

Latest Articles