இருளுக்குள் நுவரெலியா பஸ் தரிப்பிடம் ! பயணிகள் பரிதவிப்பு!!

நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் மாதாந்த மின் கட்டணத்தினை செலுத்தாத காரணத்தால் நுவரெலியா மின்சார சபையின் மூலம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுவதாகவும், பயணிகளின் பணப்பைகள் , பயணப்பைகள் ,தங்க ஆபரணங்கள் களவாடப்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பேருந்து தரிப்பிடத்தில் உள்ள வியாபார நிலையங்களில் மின்சாரம் இன்றி பயணிகளின் வருகை இன்றி வியாபாரம் மந்தநிலையில் உள்ளதாக வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.

பயணிகளின் நலன் கருதியும் , வியாபாரிகளின் நிலைமை கருதியும் பேருந்து உரிமையாளர்களின் நன்மை கருதியும் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்துக்கு சொந்தமான காரியாலயத்தின் மூலம் மின்சார சபைக்கு உரிய பணத்தினை செலுத்தி மின்சாரத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டி.சந்ரு , திவாகரன்

Related Articles

Latest Articles