‘இரு நாட்கள் மட்டுமே சபை கூடும்’

நாடாளுமன்ற அமர்வு இவ்வாரம் இரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இதன்படி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சபை அமர்வுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (21) முற்பகல் 9.30 மணிக்கு   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

இதன்போதே சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி சபை நடவடிக்கைகளை இரு நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles