இறைச்சி, மீன், முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

1000 – 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென 1500 – 1600 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.

இதனுடன் சந்தையில் மீன் விலையும் அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும் பலயா 1400 ரூபாவிற்கும் பாறை 1700 ரூபாவிற்கும் தலபத் 2700 ரூபாவிற்கும் சால 400 ரூபாவிற்கும் லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles