இலங்கையில் இனப்படுகொலை நடக்கவே இல்லை!

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவே இல்லை. கனடா அல்ல உலகில் எந்த நாடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“இலங்கையில் இனப்படுகொலை நடந்தது எனக் கூறப்படுவதை ஏற்கவே முடியாது. போரின்போதுகூட சிவில் மக்களை பாதுகாத்தப்படியே போர் முன்னெடுக்கப்பட்டது. பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மக்களைக்கூட படையினரே மீட்டனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என எந்தவொரு நாடும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை.

போர் காரணமாக கைது செய்யப்பட்ட புலிகள் மற்றும் சந்தேக நபர்களை சிறைக்குள் கொல்லப்படவும் இல்லை. எனவே, கனடா அல்ல உலகில் எந்தவொரு நாடாக இருந்தாலும் இனப்படுகொலை குற்றச்சாட்டை நாம் ஏற்கமாட்டோம். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாகும். இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டிய விதத்தில் நாம் தலையிட்டுள்ளோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles